அசிங்கப்படுத்திய விஜே பாவனா.. ஸ்பாட்டிலேயே மூக்குடைத்த யோகி பாபு! காரசாரமாக கண்டிக்கும் நெட்டிசன்கள்

by .karthik kumar pc 31-08-2025. 18.50

அசிங்கப்படுத்திய விஜே பாவனா.. ஸ்பாட்டிலேயே மூக்குடைத்த யோகி பாபு! காரசாரமாக கண்டிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: நடிகரான ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் நிலையில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே பாவனா, நடிகர் யோகி பாபு அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், விஜே பாவனாவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தமிழ் துறைகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதற்கு பிறகு காதல், செண்டிமெண்ட், காமெடி, ஆக்சன் என தனது டிராக்கை மாற்றிக்கொண்டு முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

 

 

 

ரவி மோகன்

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை வைத்து தான் தற்போது ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. தற்போது ரவி மோகன் தனது தயாரிப்பில் ப்ரோ கோட் என்ற படத்தில் நடிக்கிறார். இதை அடுத்து யோகி பாபு நடிக்கும் திரைப்படத்தை தயாரித்து இயக்க உள்ளதாக அறிவித்தார்.

யோகி பாபு பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகி பாபு உள்ளிட்டோரிடம் விஜே பாவனா 'மைண்ட் வாய்ஸ் கேம்' விளையாடினார். அதாவது வந்திருந்த விருந்தினர்களிடம் உங்கள் மனதில் இப்போது என்ன நினைக்கிறீர்கள்? என ஒவ்வொரு பிரபலத்தின் புகைப்படத்தை காட்டி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து யோகி பாபுவிடம் சென்ற அவர், "ஜெயம் ரவியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.

அப்போது, " என்னை வைத்து படம் எடுக்கும் ரவி மோகன் சார் நல்லாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா "நீங்க ரொம்ப நல்லவர் மாதிரி பேசாதீங்க.. மனசுல என்ன நினைச்சீங்களோ அதை சொல்லுங்க" என பதில் அளித்தார். இதனால் யோகி பாபு ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றார். உண்மையில் வருத்தத்தோடு இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பின்னர், "நான் மனசுல நினைச்சிட தான் சொன்னேன்" என பாவனாவுக்கு பதில் அளித்ததும், "ரொம்ப சந்தோசம்" என கூறினார் பாவனா.

இருந்தும் விடாத யோகி பாபு," நான் எப்போதும் அப்படித்தான் நினைப்பேன். உன்ன மாதிரியா, உன் பக்கத்துல நின்னா உள்ள விடாதீங்க.. சேர் கொடுக்காதீங்க.. அப்படின்னு நீ சொன்னதெல்லாம் எனக்கு தெரியும்" என பதில் அட்டாக் கொடுக்க பேச முடியாமல் நின்றார் பாவனா. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் யோகிபாபுவுக்கு ஆதரவாகவும், விஜே பாவனாவுக்கு எதிராகவும் சமூக வலைதள பதிவுகளை பார்க்க முடிகிறது. மேடை நாகரீகம் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நடிகரை பார்த்து நடிக்காதீங்க என சொல்வதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை எனவும், விஜே பாவனா உண்மையில் வன்மத்தை தான் கொட்டியிருக்கிரார் என கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.