Delhi Election 2025 | ஆம் ஆத்மி ஆட்சியை இழக்க முக்கிய காரணம்.. 11 தொகுதிகளில் வேட்டுவைத்த காங்கிரஸ்!

Delhi Election 2025 | டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதால், ஆம் ஆத்மி கட்சி 43% வாக்குகளுடன் தோல்வியடைந்தது. பாஜக 45.5% வாக்குகளுடன் வெற்றி பெற்றது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டதே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்ததற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 45.5 விழுக்காடு வாக்குகள் பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி 43 விழுக்காடு வாக்குகளும், காங்கிரஸ் ஆறு விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளன.

'இந்தியா' கூட்டணியின் வாக்குகள் சிதறியதால் டெல்லியில் பாஜக எளிதாக வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக-விடம் தோற்றனர். அதே நேரத்தில் அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றதால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.