தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது. அதிலும் கடந்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற உச்சத்தை தாண்டியது. அதன் பின்னரும், தொடர்ந்து விலை அதிகரித்தபடியே காணப்பட்டு, ஒரு சவரன் ரூ.61 ஆயிரம், ரூ.62 ஆயிரம், ரூ.63 ஆயிரம் என்ற நிலைகளை கடந்தது. நேற்று முன்தினம் மேலும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டிப் பிடித்தது.
மார்ச் மாதத்துக்கு பிறகுதான் இந்த விலையை தொடும் என்ற கணிப்பையெல்லாம், இந்த விலை உயர்வு பொய்யாக்கிவிட்டது. கடந்த 8 நாட்களாக தொடர்ந்து உச்சத்திலேயே பயணித்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.960 குறைந்து, ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கடந்த 5-ந்தேதி விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.107-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 8-வது நாளாக அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது.