மராட்டியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

மராட்டியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

மராட்டியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

மராட்டியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

மராட்டிய மாநிலம் தானேவில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஷாஹத் பகுதியில் நேற்று முன்தினம் வழக்கமான கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையில், அவர்களிடம் இருந்து 1.114 கிலோ கலப்பின கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.22.28 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்திய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.