திமுக நிர்வாகிகள் இடையே கிரிக்கெட் பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
திமுக நிர்வாகிகள் இடையே கிரிக்கெட் பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

திமுக நிர்வாகிகள் இடையே கிரிக்கெட் பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
திமுக ஆட்சியில் விளையாட்டுப்போட்டிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக மேயர் பிரியா கூறினார்.
திமுக நிர்வாகிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளில் இளைஞரணி, அயலக அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.